கெஜ்ரிவாலின் மாயாஜாலம்… அடுத்தகட்ட நகர்வுகள்… தொண்டர்களுக்கு உத்தரவுகளை வாரி வழங்கிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.!

Default Image

2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2025 டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்தும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் பாஜக தொண்டர்கள் மத்தியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்துகொண்டு பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது டெல்லியில் ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பற்றி பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். மேலும், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2025 டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்தும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் அதில் பேசினார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் மந்திர மாயாஜாலம் : அப்போது பேசிய அவர், டெல்லியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது அதற்கான பிரச்சாரத்தில் நான் ஈடுபட்டேன். அப்போது டெல்லி மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவாலின் மந்திர மாயாஜாலம் குறைந்ததை நான் கண்டேன். இந்த சமயம் நாம் நமது மோடி அரசின் பணிகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். 2024 மற்றும் 25 தேர்தலில் வெற்றி நமதுடையதாக இருக்க வேண்டும் என அந்த கூட்டத்தில் பேசினார்.

யமுனை நதிக்கரை : மேலும் கடந்த எட்டு ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு டெல்லி யமுனை நதிக்கரையை மிகவும் மோசமாக்கி உள்ளது. என்றும், ஆனால், டெல்லியை தாண்டி நரேந்திர மோடி அரசு யமுனை நதிக்கரையை மிகவும் மேம்படுத்தி வருகிறது எனவும் இதனை மக்களுக்கு எடுத்துரைக்கவும் தொண்டர்கள் அமைச்சர் அனுராக் தாக்கூர் கேட்டுக்கொண்டார்.

மேலும், டெல்லியில் உள்ள 60 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த ஏழை தொழிலாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் இலவச ரேஷன் அரிசியை ரேஷன் பொருள்களை பெற ஆம் ஆத்மிஅரசு நடவடிக்கை டெல்லி அரசு மேற்கொள்ளவில்லை இதனை மக்களிடம் நாம் தெரிவிக்க வேண்டும் எனவும் தொண்டர்கள் மத்தியில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறி தனது உரையை ஆற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்