வீட்டில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிமீட்டர்களை வழங்கிய முதல்வர் கெஜ்ரிவால்.!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்காக டெல்லி முழுவதும் தீவிர சிகிச்சை பிரிவுகள் (ஐ.சி.யூ) படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் ஆக்சிமீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது கவலைப்படத் வேண்டாம். வரும் காலங்களில் ஐ.சி.யூ படுக்கைகள் தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன். தீவிர நோயாளிகளுக்கு எல்.என்.ஜே.பி, ஜி.டி.பி, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அது அதிக அளவில் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தற்போது மேலும் 200 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை நடத்தப்படும் என்று கூறினார். எல்.என்.ஜி.பி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை பிளாஸ்மா சிகிச்சையை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் சில தனியார் மருத்துவமனைகளும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை நடத்தப்படதலிருந்து இறப்பு எண்ணிக்கை முந்தையதை விட குறைவாகவே குறைந்துள்ளது என கூறினார்.
தினமும் கிட்டத்தட்ட 3000 புதிய கொரோனா நோயாளிகளை உறுதிசெய்யபட்டு வருகிறது. இருந்தாலும் பெரும்பாலானோருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவை இல்லை என்பதால், மருத்துவமனைகளில் மொத்தம் 20000 படுக்கைகள் நிரம்பி உள்ளன.