கொரோனா நோயாளிகள் இருந்த படுக்கையறை காலியாகி இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நாளுக்கு நாள் பறித்து கொண்டே இருக்கின்ற உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்நிலையில் டெல்லியில் 23 ஆயிரத்து 545 பேர் இதுவரை இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் 500 முதல் 800 பேர் ஒரு நாளைக்கு புதிதாக கிருமித்தொற்று ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் காலியாக இல்லை என கூறிவிட்டு கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், டெல்லி முதலமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவால் அதிக கட்டணம் தருவோரை அனுமதிப்பது தவறான முறை எனவும் பிற கட்சி தலைவர்களின் ஆதரவுடன் ஈடுபடக்கூடிய மருத்துவமனைகள் அரசின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனவும் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் எவ்வளவு படுக்கை அறைகள் காலியாக உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கான செயலியை செவ்வாய்க்கிழமை டெல்லி அரசு அறிமுகப்படுத்தும் எனவும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட…
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…