கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை காலியாக இருந்ததை அறிவிக்காத மருத்துவமனைக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை! பி

Default Image

கொரோனா நோயாளிகள் இருந்த படுக்கையறை காலியாகி இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நாளுக்கு நாள் பறித்து கொண்டே இருக்கின்ற உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்நிலையில் டெல்லியில் 23 ஆயிரத்து 545 பேர் இதுவரை இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் 500 முதல் 800 பேர்  ஒரு நாளைக்கு புதிதாக கிருமித்தொற்று ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில்  உள்ள கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் காலியாக இல்லை என கூறிவிட்டு கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், டெல்லி முதலமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவால் அதிக கட்டணம் தருவோரை அனுமதிப்பது தவறான முறை எனவும் பிற கட்சி தலைவர்களின் ஆதரவுடன் ஈடுபடக்கூடிய மருத்துவமனைகள் அரசின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனவும் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் எவ்வளவு படுக்கை அறைகள் காலியாக உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கான செயலியை செவ்வாய்க்கிழமை டெல்லி அரசு அறிமுகப்படுத்தும் எனவும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்