டெல்லி: ஜூன் 1இல் நிறைவடைய உள்ள இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் சத்யேந்திர ஜெயின், மனீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை.
இந்த சட்டவிரோத கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் கடந்த , மே 10ஆம் தேதியன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரையில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் நடைபெறுவதை சுட்டிக்காட்டியும், நீதிமன்ற கோடை விடுமுறையை குறிப்பிட்டும் இந்த இடைக்கால ஜாமீன் வழங்ப்பட்டதாக கூறப்பட்டது.
இன்னும் சில தினங்களில் இடைக்கால ஜாமீன் முடிந்து ஜூன் 2இல் கெஜ்ரிவால் சரணடைய வேண்டிய சூழல் இருக்கும் வேளையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தனது இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி மனு அளித்துள்ளார் அரவிந்த் கெஜிரிவால். மருத்துவ காரணங்களை மேற்கோள் காட்டி இந்த கோரிக்கையை கெஜ்ரிவால் முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…