வாக்கு கேட்டு பாஜக வரும்போது இதை நினைவில் வைத்திருங்கள் – ராகுல் காந்தி
வேலை கேட்டு வந்த இளைஞர்களைத் தடியால் அடிக்கிறது உத்தரப் பிரதேச அரசாங்கம்.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் பாஜக குறித்து விமர்சித்து அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிப்பதுண்டு. அந்த வகையில், உத்திர பிரதேச அரங்கம் குறித்து விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.
அதன்படி, ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், உத்திரபிரதேச மாநிலத்தில், வேலை தேடி சென்ற இளைஞர்கள் தாக்கப்படும் வீடியோவை பதிவிட்டு, ‘வேலை கேட்டு வந்த இளைஞர்களைத் தடியால் அடிக்கிறது உத்தரப் பிரதேச அரசாங்கம். வாக்கு கேட்டு பாஜக வரும்போது இதை நினைவில் வைத்திருங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
रोज़गार माँगने वालों को #UP सरकार ने लाठियाँ दीं-
जब भाजपा वोट माँगने आए तो याद रखना! pic.twitter.com/ZZGg9thd7n— Rahul Gandhi (@RahulGandhi) December 5, 2021