தேர்தல் நன்கொடை பத்திரங்களை தயாராக வைத்திருங்கள் – உச்சநீதிமன்றம்

supreme court of india

கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி மசோதாவாக (தேர்தல் பத்திரம் திட்டம்) தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறுவதற்கு வழிவகுக்கப்பட்டது. அதாவது அரசியல் கட்சிகள் நன்கொடை பெற உதவும் தேர்தல் பத்திரங்கள் நிதி சட்டம் கடந்த 2017 ல் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது.

நிதி மசோதாவாகத்த தாக்கல் செய்யப்பட்டதால் நாடாளுமன்ற மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. ரிசர்வ் வங்கிச் சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைத் திருத்தி இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் தேர்தல் நிதி வழங்குவதற்கான தேர்தல் பத்திரங்களை வெளியிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, எஸ்பிஐ சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும் – அண்ணாமலை

தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம் என்றும் இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது, 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும் எனவும் இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இது சட்டவிரோதம் என்றும் இந்த சட்டத்தில் உள்ள சரத்துகள் பலவும் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாகவும் கூறி  உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நீடிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நீண்ட நாட்களாக விசாரிக்கப்படாமலேயே இருந்து வந்தது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் வழக்கினை விசாரிக்க கோரிக்கை வைத்தபோது, தற்போதைக்கு தேர்தல் எதுவும் இல்லை, இந்த வழக்கினை உடனடியாக விசாரிக்க வேண்டியது இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தார்கள். தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகள் அதிக அளவில் நிதி பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்கள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

தமிழ்நாடு நாள்: தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ்

இந்த நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,பி.ஆர்.கவாய், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திரங்களை தயாராக வைத்திருங்கள், ஆய்வு செய்வோம் என்றும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவதை தடுக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அரசியல் கட்சிகளின் உண்மை தன்மையை குடிமக்கள் அறியக்கூடிய அடிப்படை உரிமையை மீறுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 31 அரசியல் கட்சிகள் ரூ.16,438 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளன என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதம் வைத்தார். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் ஊழல்வாதிகளை பாதுகாக்கிறது என வழக்கறிஞர் கபில் சிபில் கூறியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பின் 3ம் பாகத்தின் கீழ் உள்ள எந்தவொரு அடிப்படை உரிமைகளையும் மீறவில்லை என அட்டர்னி தெரிவித்துள்ளார். எனவே, வாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை தொடரும் என அறிவித்தது.

இதனிடையே, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி உச்ச நீதிமன்றத்தில் 4 பக்க மனுவை தாக்கல் செய்தார். அதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அறிந்து கொள்ள மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது. எனினும், அரசியல் கட்சிகளின் வருவாய், அந்த வருவாய்க்கான ஆதாரங்களை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இல்லை. எனவே, தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது. இந்த திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப்படவில்லை. யாருடைய உரிமைகளும் மீறப்படவில்லை என கூறப்பட்டிருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh