எம்.பி பதவியை ராஜினாமா செய்த கே.சி.ராமமூர்த்தி ..! பாஜகவில் இணைகிறாரா..?
கர்நாடகாவில் உள்ள காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சில தலைவர்கள் விலகி பாஜக கட்சியில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் மாநிலங்களவை எம்பியாக உள்ள கே.சி ராமமூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஏற்றுக்கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.சி ராமமூர்த்தி கர்நாடகா பாஜக தலைவரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.