அசாமில் “காசிரங்கா தேசிய பூங்கா” நாளை முதல் திறப்பு.!

Default Image

அசாம் மாநிலத்தில் “காசிரங்கா தேசிய பூங்கா” அக்டொபர் 21 முதல் திறக்கப்படுகிறது.

அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா ஏழு மாதங்கள் கழித்து  நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. கொரோனா தோற்று காரணமாக இது மார்ச் மாதத்தில் மூடப்பட்டது.  இது, காசிரங்கா பூங்காவின் 112 ஆண்டு வரலாற்றில் நீண்ட கால பணிநிறுத்தம் ஆகும்.

இந்நிலையில், அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் நாளை இந்த புகழ்பெற்ற பூங்காவை முறையாக மீண்டும் திறந்து வைக்கவுள்ளார் என அந்த பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பூங்கா மீண்டும் திறந்த பிறகு சில நாட்களுக்கு யானை சபாரிகள் கிடையாது. ஆனால், அவை நவம்பர் முதல் மீண்டும் தொடங்கலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அசாமில் உள்ள ஐந்து தேசிய பூங்காக்கள் மற்றும் 18 வனவிலங்கு சரணாலயங்கள் வெள்ளம் காரணமாக ஆண்டுதோறும் சுமார் ஐந்து மாதங்கள் மூடப்பட்டிருப்பது வழக்கம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்