ராமேஸ்வரம், சிவமயம், திருவள்ளுவர், பாரதியார் என காசி தமிழ்ச்சங்கத்தில் பிரதமர் மோடி புகழாரம்.!
காசி தமிழ்ச்சங்கமம் தனித்துவம் சிறப்பு வாய்ந்தது. காசி நகரம் பழமை வாய்ந்து. சிறப்பு வாய்ந்தது. அது போல, தமிழகமும் பழமை வாய்ந்தது, சிறப்பு வாய்ந்தது. காசி மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. – காசி தமிழ்ச்சங்கத்தில் பிரதமர் மோடி புகழாரம்.
வாரணாசியில் உள்ள பனராஸ் பல்கலைக்கழகத்தில், காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டுள்ளார்.
மேலும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் முருகன், இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வு வரும் 17-ஆம் தேதி வரியா நடைபெறவுள்ளது.
இதில் பேசிய பிரதமர் மோடி தமிழகத்தை பற்றியும், காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு பற்றியும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும், 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் மொழிபெயர்ப்பு புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
பிரதமர் மோடி பேசுகையில், காசி தமிழ்ச்சங்கமம் தனித்துவம் சிறப்பு வாய்ந்தது. காசி நகரம் பழமை வாய்ந்து. சிறப்பு வாய்ந்தது. அது போல, தமிழகமும் பழமை வாய்ந்தது, சிறப்பு வாய்ந்தது. காசி மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. உத்தரபிரதேச மாநில அரசும், பனாரஸ் பல்கலை கழகமும், சென்னை ஐஐடி பல்கலைகழகமும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
நம் நாட்டில் ஓர் கொள்கை உள்ளது. அது, ஒரே உண்மை அது பல வழிகளில் வெளிப்படுகிறது என்பதாகும். அதில் தமிழகமும், காசியும் ஒன்று. காசி , தமிழகம் இரண்டும் , சமஸ்கிருதம் , தமிழ் என இரு சிறப்புகளை கொண்டுள்ளது. காசி, ராமேஸ்வரம் இரண்டும் சிவமயம் ஆனது. சக்தி மயமானது.
காசி, தமிழகம் என இரண்டும் கலை, கலாச்சாரம் ஆகியவற்றில் சிறப்பு வாய்ந்தது. இங்கு காசி பட்டு என்றால், அங்கு காஞ்சி பட்டு சிறந்து விளங்குகிறது. காசியை நினைவு படுத்தும் வகையில் தென்காசி சிவன் கோவில் உள்ளது. காசியில் துளசிதாசர் பிறந்தார். தமிழகத்தில் திருவள்ளுவர் பிறந்தார். தமிழக திருமணங்களில் கூட காசி யாத்திரை என்கிற ஒரு நிகழ்வு உள்ளது. அப்போது இருந்தே காசிக்கும், தமிழகத்துக்கும் நீண்ட காலமாக ஒரு பந்தம் இருந்து வருகிறது என்பதை உணர்த்துகிறது.
காசியை வளர்த்ததில் தமிழர்களுக்குமுக்கிய பங்குண்டு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு நிறைய பங்காற்றியுள்ளார். ராஜேஷ்வர் சாஸ்திரி என்பவர் ராம்காட் பகுதியில் வேதம் வளர்தவர். பட்டாபிராம் சாஸ்திரி என்பவர் ஹனுமன்காட் பகுதியில் திருக்கோயில் நிறுவகித்துள்ளார்.
இங்கு காசி நகரை சுற்று ஹரிச்சந்திரகட் எனும் இடத்தில் காமகோடீஸ்வர் திருக்கோயில் இருக்கிறது. அதில் தமிழ் பண்பாட்டை குறிப்பிடுகிறது. கேதார்நாத்தில் குமாரசாமி மடம் உள்ளது. ஹனுமன்காட்பகுதியில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாரதியார் இங்கு காசியில் பல ஆண்டுகாலம் வசித்து கல்லூரியில் பயின்றுள்ளார். இங்கு தான் முறுக்கு மீசை வைத்தார் பாரதி. பனாரஸ் பல்கலைக்கழத்தில் பாரதியாருக்கு தனி இருக்கை அமைத்து சிறப்பிக்கபட உள்ளது. ‘ என பிரதமர் மோடி காசி தமிழ்ச்சங்கத்தில் தமிழ்நாட்டை பற்றி பெருமையாக பேசினார்.