காஷ்மீர் மாநிலமானது 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு அங்கு பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்ற முயற்சித்ததால் இந்திய ராணுவ துணையோடு அதனை முறியடித்தது. இதற்காக காஷ்மீர் மன்னர் சில ஒப்பந்தங்களுடன் ஜம்மு காஸ்மீரை இந்தியாவுடன் இணைத்து கொண்டார்.
அதன் படி, காஷ்மீர் பாதுகாப்பு, காஷ்மீர் வெளிநாட்டு விவகாரம், தகவல் தொடர்பு ஆகியவற்றில் மட்டுமே இந்திய அரசாங்கம் தலையிட முடியும். மேலும், இந்திய அரசியல் சட்டம் 370இன் படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வாங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் காஷ்மீர் மாநிலமானது தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் பூர்வகுடிகள் மட்டுமே காஷ்மீரில் நிலம் வாங்க விற்க முடியும். சட்டத்தை அம்மாநிலதிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். என பல்வேறு அந்தஸ்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று கடும் அமளிக்கு நடுவில் நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக அறிவித்தார். இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதால், 6 ஆண்டுகல மாநில ஆட்சி காலம் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டம் இனி காஷ்மீருக்கும் பொருந்தும். இனி வெளிமாநிலத்தவரும் காஷ்மீரில் நிலம் வாங்கலாம். ஜம்மு காஷ்மீர் எல்லைகளை கூட்டலாம் குறைக்கலாம்.
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…