சுவிட்சர்லாந்து செல்வதை மக்கள் மறக்கும் வகையில் காஷ்மீர் வளர்ச்சி அடையும்- பிரதமர் மோடி

modi

பிரதமர் மோடி நேற்று ஜம்முவிற்கு பயணம் மேற்கொண்டு ரூ. 32,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார். அங்குள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற உரையாற்றிய பிரதமர், “கடந்த ஆண்டு ஸ்ரீநகரில் நடந்த ஜி20 நிகழ்வின் போது காஷ்மீரின் அழகு, பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவை மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது, மேலும் அனைவரும் அந்த இடத்தைப் பார்வையிட விரும்புகிறார்கள்.

இப்போது அனைவரும் காஷ்மீருக்கு வர விரும்புகிறார்கள். மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க ஜம்மு காஷ்மீரில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். கூட்டத்தை பார்த்த அவர், இவ்வளவு தூரம் நீங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என்றார்.

மாநிலங்களவை தேர்தல்: 12 மாநிலங்களில் இருந்து 41 பேர் போட்டியின்றி தேர்வு!

வன்முறை மற்றும் பிரிவினைவாதத்தால் சிதைக்கப்பட்ட ஜம்முவின் கொந்தளிப்பான கடந்த காலத்தை நினைவுகூர்ந்த மோடி, தற்போது இணக்கமான மற்றும் செழிப்பான ஜம்மு-காஷ்மீரை நோக்கி நகர்வதைப் பாராட்டினார். ஜம்முவிடம் இருந்து ஏமாற்றம் தரும் செய்திகள் வந்த நாட்களை நாம் பார்த்திருக்கிறோம்.  இன்று, சமச்சீர் மற்றும் முழுமையான வளர்ச்சியுடன் ஒரு புதிய ஜம்முவை நாங்கள் காண்கிறோம்.

அடுத்த சில ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரை மேலும் வளர்ச்சியடையச் செய்வோம் மற்றும் உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மக்கள் சுவிட்சர்லாந்திற்கு செல்வதை மறந்துவிடும் வகையில் காஷ்மீரில் உள்கட்டமைப்பை உருவாக்குவோம்” என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 2019 இல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்முவிற்கு மோடி மேற்கொள்ளும் 2-வது பயணம் இதுவாகும். முன்னதாக அவர் கடந்த ஏப்ரல் 2022 இல் சம்பா மாவட்டத்தில் ஒரு பொது பேரணியில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்