மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர்
நீண்ட நாட்களுக்கு பிறகு காஷ்மீர் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாநிலங்களவையில் அறிவித்தார்.அதில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது.மேலும் காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. உடனடியாக,காஷ்மீர் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.பின் நீக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் காஷ்மீரில் 3,557 ரேசன் கடைகள் செயல்பட தொடங்கியது என்று காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.-கள் செயல்பட தொடங்கியுள்ளது . காய்கறி, சமையல் எரிவாயு உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் வீட்டு வாசலுக்கே சென்று வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.