காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்:பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று காஷ்மீரில் உள்ள ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத்தை நேரில் அழைத்து வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.