காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கு மாநிலங்களவையில் பெரும் விவாதம் ஏற்பட்டது .மேலும் திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானதே காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பிறகு அதற்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்படும் என அமித்ஷா கூறினார்.
இதை தொடர்ந்து காஷ்மீர் பிரிப்பு மசோதாக்கள் மீது குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதனையடுத்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது .சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 61 வாக்குகளும் பதிவாகியது.
சென்னை: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் பயின்று ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து…
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…