#தீவிரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்! NIA அதிரடி!
யூனியன் பிரதேசமான காஷ்மீரில் தீவிரவாதிகளின் சொத்துக்களை தேசிய புலனாய்வு முகமை அதிரடியாக முடக்கியுள்ளது
தெற்கு காஷ்மீரில் கடந்த 2017ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினான சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இர்சத் அகமது ரேசி என்கிற பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.
இந்த பயங்கரவாதியின் தந்தைக்கு சொந்தமாக புலவாமா மாவட்டம் கல்கபோராவில் உள்ள ரத்னிபோரா பகுதியில் வீடு ஒன்று உள்ளது.
இந்த வீட்டை பயங்கரவாத செயல்பாடுகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பயங்கரவாதிகளின் வீடு உள்ளிட்ட சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை நேற்று அதிரடியாக முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.