காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரம்!
முதற்கட்ட வாக்குப்பதில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.17% வாக்குகள் பதிவாகியுள்ளது.
காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 11. 11 சதவீத வாக்குகள் பதிவானது.
இதை தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 26.72 சதவீத வாக்குகளும், தற்பொழுது பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.17% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், அதிகப்டசமாக, கிஷ்த்வாரில் 56.86% வாக்குகளும், குறைந்தபட்சமாக புல்வாமாவில் 29.84% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
Jammu and Kashmir 1st phase Assembly elections: 41.17% voter turnout recorded till 1 pm in Jammu and Kashmir, as per the Election Commission of India
Anantnag-37.90%
Doda- 50.81%
Kishtwar-56.86%
Kulgam-39.91%
Pulwama-29.84%
Ramban-49.68%
Shopian-38.72% pic.twitter.com/urAeZzuhXt— ANI (@ANI) September 18, 2024
7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3 பேர் மட்டுமே பெண்கள். சுமார் 23 லட்சம் பேர்இந்த முதல்கட்ட தேர்தலில் வாக்களிக்கின்றனர். இன்று மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும்.
சட்டம் 370 நீக்கப்பட்ட பிறகு, நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். இங்கு கடைசியாக 2014இல் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்ட தேர்தல் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி 26 தொகுதிகளில் நடைபெறும். மீதம் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.