காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்து கொள்ளும் – ட்ரம்ப் அதிரடி கருத்து!
பிரான்சில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு சிறப்பு அழைப்பு வந்ததை அடுத்து முதன்முறையாக இந்தியா சார்பில் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு நிகழ்ந்தது.
அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. ‘இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளும்.’ என அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், அதே போல, ‘காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகளின் நிலை குறித்து கவலை கொள்ளமாட்டோம். இந்த விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயானது.’ என பிரதமர் மோடியும் அதிரடியாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதற்கு முன்னர், ‘காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது.’ என அதிபர் டிரம்ப் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டுள்ளார். பிரதமர் மோடி, ‘இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்’ என கூறினார்.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு கலந்து கொண்டனர். இதில் இருநாடுகளுக்கு இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கைதாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.