காஷ்மீர் விவகாரம் : இந்திய – பாகிஸ்தான் இடையே இயங்கும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் நிறுத்தம் – பாகிஸ்தான் அதிரடி!
ஜம்மு காஷ்மீர் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் வர்த்தக உறவு இல்லை என்று அறிவித்து உள்ளது.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுக்கும் விதமாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற இந்தியாவின் விவகாரத்தில் யார் தலையிட முயன்றாலும் அவர்களின் முயற்சி வெற்றி பெறாது என கூறியது.
இதைத்தொடர்ந்து இந்தியாவில் இருந்த பாகிஸ்தான் தூதரை பாகிஸ்தான் அரசு தம் நாட்டிற்கு அழைத்து கொண்டனர்.இந்நிலையில் டெல்லியில் இருந்து லாகூர் செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் இரயிலை பாகிஸ்தான் நிறுத்தி வைத்து உள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதியில் உள்ளனர்.
மேலும் இந்தியத் திரைப்படங்கள் பாகிஸ்தான் திரையரங்கில் வெளியிட அனுமதி இல்லை எனவும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து கூறப்பட்டு உள்ளது.