காஷ்மீர் விவகாரத்தில் தமிழகம், ஆந்திராவை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா!

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் இன்று முழுவதும் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விவாதம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘ 370 சட்டப்பிரிவு மற்றும் 35ஏ மூலம் காஷ்மீரில் ஜனநாயகம் முழுமையாக நிலைநாட்டப்படவில்லை, மேலும் அங்கு வாழும் மக்களுக்கு வளர்ச்சியும் ஏற்படவில்லை. இந்த சிறப்பு அந்தஸ்தை சில அரசியல்வாதிகளும், பணக்கார குடும்பங்களும் மட்டுமே பயன் பெற்றுள்ளனர்.’ என்றும்,
மேலும், ‘ தமிழகம் , ஆந்திரா போன்ற மாநிலங்கள் பிரிவு 370 இல்லாமலும், மொழி மற்றும் கலாச்சாரத்தை பேணி பாதுகாத்து வருகின்றனர்.’ என தெரிவித்தார். மேலும் ‘காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தாற்காலிகமானது தான் என்று தெரிவித்தார்.காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பின்னர் அதற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.’ என்றும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025