ஐநாவில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய துருக்கி அதிபர்… இந்தியா கடும் கண்டனம்…

Published by
kavitha

ஐக்கிய நாடுகளின்  பொதுச்சபையில் காஷ்மீர் பிரச்னை குறித்து துருக்கியின்  அதிபர் எர்டோகன் பேசியது முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல’ என்று இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பொதுச்சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் உரை, வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, மாநாட்டில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் மோடியின் உரை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை, துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்டோகனின் பேச்சு வெளியிடப்பட்டது.அதில் பேசிய எர்டோகன், “தெற்காசியாவின் அமைதிக்கு முக்கிய காரணியாக இருக்கும் காஷ்மீர் பிரச்னை, தற்போதும் முக்கிய பிரச்னையாக மாறி உள்ளது. குறிப்பாக, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்த பிரச்னை மிகவும் சிக்கலாகி விட்டது. ஐக்கிய நாடுகளின்  தீர்மானங்களுக்கு உட்பட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,’’ என்றார்.  துருக்கி அதிபரின் இந்த பொறுப்பற்ற பேச்சிற்கு இந்தியாவுக்கான ஐநா.வின் நிரந்தர தூதர் திருமூர்த்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்தார். `இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் துருக்கி தலையிடுவது, முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. பிற நாடுகளின் இறையாண்மையை மதிக்க, துருக்கி முதலில் கற்று கொள்ள வேண்டும். துருக்கி முதலில் தனது நாட்டின் கொள்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது,’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Published by
kavitha

Recent Posts

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

1 hour ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

2 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

4 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

4 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

5 hours ago

தவெக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார் – விஜய் இரங்கல்.!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…

6 hours ago