காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யா உலக நாடுகளுக்கு திட்டவட்ட கருத்து… பங்காளியின் அறிவிப்பால் பறிதவிக்கும் சீனா..
- காஷ்மீர் விவகாரம் குறித்த ரஷ்யாவின் நிலைப்பாட்டை ரஷ்யா அறிவித்தது.
- காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய சீனாவிற்க்கு மூக்குடைப்பு..
ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தை சீனா ஐநா சபையில் எழுப்பி மூக்கு உடைந்த விவகாரம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், இதுகுறித்து இந்தியாவின் நீண்டகால நண்பனான ரஷ்யா தனது நிலைப்பாடை தெளிவாக முன்வைத்துள்ளது. இதில், காஷ்மீர் விவகாரம் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உள்நாட்டு பிரச்னை, அதில், ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இல்லை’ என, இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் நிகோலே குடாஷெவ் தெரிவித்தார்.இது குறித்து, இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் நிகோலே குடாஷெவ் தெரிவித்ததாவது, ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை மீது சந்தேகம் உள்ளவர்கள், அங்கு நேரடியாகச் சென்று பார்த்துக் கொள்ளட்டும்.
காஷ்மீர் விவகாரத்தில், ரஷ்யாவை பொறுத்தவரை இந்தியா மீது எந்த சந்தேகமும் இல்லை. இது முற்றிலுமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உள்நாட்டு பிரச்னை. இதை, அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூறிய அவர், ரஷ்யாவில், வரும் மார்ச் மாதம் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெறும் ரஷ்யா – இந்தியா – சீனா முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்க, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவுக்கு வருகிறார் என்று கூறினார். சீனாவின் பல்வேறு குடைச்சல்களுக்கு இடையில் நம் நீண்ட நாள் நண்பனான ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது … ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.