ஜம்மு&காஷ்மீர் முன்னால் முதல்வருக்கு மேலும் 3 மதங்களுக்கு வீட்டுக்காவல்…
ஜம்மு&காஷ்மீர் மாநிலத்திற்கான 370ஆவது சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டு லடாக் சட்டபேரவையற்ற யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு&காஷ்மீர் சட்டபேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு&காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெஹபூபா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர் மீது மிகவும் கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.முதலில் அவர்கள் அரசு பங்களாக்களில் சிறை வைக்கப்பட்ட அவர் இந்தாண்டு ஏப்ரல் மாதம் 7ல் இருந்து வீட்டுக் காவலில் உள்ளார்.
அவருடைய காவல் இன்று முடிவடையும் நிலையில் தற்போது மேலும் மூன்று மாதங்களுக்கு வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் முதல்வரான தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கடந்த பிப்ரவரி மாதத்தில் விடுவிக்கப்பட்டார். அவருடைய மகனும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கடந்த மார்ச் மாதத்தில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி மீதான பொது பாதுகாப்பு சட்டக் காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.