காஷ்மீரின் தெற்கு பகுதியான புல்வாமா மாவட்டம் லித்தாபோரா என்ற பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ்படை முகாம் மீது கடந்த ஞாயிறன்று இரவு பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.உடனே சுதாரித்துக்கொண்ட சி.ஆர்.பி.எப்.படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் கடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இவர்கள் இடையே நடந்த 37 மணி நேர துப்பாக்கிச் சண்டை நேற்று முடிவுக்கு வந்தது. இதில் 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இது குறித்து சி.ஆர்.பி.எப். .ஐ.ஜி. ரவிதீப் ஷகாய் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் லஷ்கரே தொய்பா பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் ஏ.கே. 47 உள்ளிட்ட நவீன துப்பாக்கிகள் வைத்திருந்தனர் என்றும் கூறினார் . அவர்களிடம் கைப்பற்றிய டைரியில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்குவோம் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. மேலும் அங்கு தேடுதல் வேட்டை நடக்கிறது என்று தெரிவித்தார்….
source: dinasuvadu.com
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…