பாகிஸ்தான் ராணுவத்தினரின் எல்லை விதிமீறல்கள் கடந்த ஆண்டை விட 50 – 60 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. – ஜம்மு-காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங் .
ஜம்மு-காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங் உதம்பூர், ரியாசி ஆகிய பகுதிகளில் தலா ஒரு உடற்பயிற்சிகூடம் கட்டப்பட்டிருந்தது. அதனை மக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைக்க சென்றிருந்தார். அப்போது அந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர், உதம்பூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, டிஜிபி இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தினரின் எல்லை விதிமீறல்கள் கடந்த ஆண்டை விட 50 – 60 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
மேலும், ‘ காஷ்மீர் பகுதியில் 2-3 போராளிகளை தவிர ஜம்மு மாகாணத்தில் தீவிரவாதம் பெரும்பாலும் குறைந்துவிட்டது. போராளிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட தினத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் சிலர் அச்சுறுத்தல் ஏறுபடுத்தலாம். அதனை சமாளிக்க நமது அதிகாரிகள் தயாராக உள்ளனர். ‘ எனவும் டிஜிபி தெரிவித்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…