காஷ்மீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் நடந்த 2 பயங்ரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் மாதிரி தோற்ற படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஷிவ் கோரி கேத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு வழிபட சென்ற பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தூப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததுடன், 41 பேர் காயமடைந்தனர். அதன்பின், செவ்வாய்க்கிழமை அன்று பதேர்வாவின் சட்டர்கல்லாவில் உள்ள 4 ராஷ்ட்ரிய ரைஃபில் மற்றும் போலீஸ் கூட்டுச் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
மேலும், இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையிருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்தது. இந்த பயங்கர தாக்குதலில் ஒரு காவல் அதிகாரி உட்பட 7 பாதுகாப்பு படையினர் பலத்த காயமடைந்தனர். அதனை தொடர்ந்து, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 9 பேர் உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகையாக அறிவித்தார் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர்.
மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியின் மாதிரி வரைபடத்தை வெளியிட்டு, அந்த பயங்கரவாதியை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில் தற்போது நேரில் கண்ட சாட்சிகளை கருத்தில் கொண்டு மாதிரி வரைபடம் வரைந்து 4 பயங்கர வாதிகளின் படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தீவிரவாதிகளின் இருப்பு மற்றும் நடமாட்டம் பற்றிய தகவல் தெரிந்தால் அதனைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…