காஷ்மீர்: மசூத் அசாரின் சகோதரர் உட்பட 15 பயங்கரவாதிகள் ஊடுருவல் !
அமர்நாத் யாத்திரை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து காஷ்மீரில் இராணுவ வீரர்களை தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரோ இடத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்தது.இதை தொடந்து அங்கு பயங்கரவாதிகளுக்கும் , இராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.இந்த சம்பவத்தில் பயங்கரவாதி ஒருவர் இறந்தார்.மேலும் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இந்நிலையில் ஜெய்ஷ்-இ -முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் தலைமையில் 15 பயங்கரவாதிகள் எல்லை பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது.
இதனால் காஷ்மீரில் ஜூலை 25 முதல் செப்டம்பர் 5 தேதி வரை நடைபெற இருந்த மாதா யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை மாறி உள்ளது.