சிபிஐ போலீஸார், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்ட கார்த்திக் சிதம்பரத்தை, மும்பை அழைத்துச் சென்று இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிப்ரவரி 28-ம் தேதி சென்னை விமான நிலையத்தில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனையடுத்து, டெல்லி அழைத்துச் சென்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஒருநாள் சிபிஐ காவலில் எடுத்தனர்.
ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒருநாள் காவல் முடிந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிஐ காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்ட கார்த்திக் சிதம்பரத்தை மும்பை அழைத்துச் சென்று சிபிஐ போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்குத் தொடர்புடைய முக்கியமான பல பணவர்த்தனைகளும் பேச்சுவாரத்தைகளும் மர்மங்களும் மும்பையில் நடந்துள்ளதால், மும்பையில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…