கார்த்தி சிதம்பரம் ரூ.2 கோடி செலுத்தி விட்டு வெளிநாடு செல்லலாம்- உச்சநீதிமன்றம் .!
கார்த்தி சிதம்பரம் ரூ.2 கோடி பிணைத்தொகையாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் ரூ.2 கோடி பிணைத்தொகையாக செலுத்த வேண்டும் மற்றும் பயணத்திற்கு முன் தனது விரிவான பயணத்திட்டத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.