அமலாக்கத்துறை அதிரடி..!கார்த்தி சிதம்பரத்தின் 1.16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்…..

Default Image

கார்த்தி  சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி சொத்துக்களை ஏர்செல் மேக்சிஸ் வழக்கில்  அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு சட்டவிரோதமாக அந்நிய முதலீட்டை பெற்றுதருவதற்காக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த சிபிஐ, கடந்த பிப்ரவரி 28ம் தேதி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது முதல் நீதிமன்ற காவலில் வைத்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் சி.இ.ஓ இந்திராணி முகர்ஜி, அந்நிய முதலீட்டை பெறுவதற்காக கார்த்தி சிதம்பரத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே கடந்த 2004 முதல் 2007 வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது அவர், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து 2011 ஏப்ரலில் சிவசங்கரன் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது.

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,அமலாக்கத்துறை ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி  சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி சொத்துக்களை  முடக்கியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்