நீதிமன்றம் , கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ, கார்த்தி சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ காவல், இன்று மாலையுடன் முடிவடைவதால் அவரை மேலும் 8 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்குமாறு மனு தாக்கல் செய்தது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் முறைகேடாக வெளிநாட்டு முதலீடுகளை திரட்ட உதவுவதற்காக, கார்த்தி சிதம்பரத்திற்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் வழங்கியதாக, இந்திராணி முகர்ஜி கூறிய வாக்குமூலம் மட்டுமல்லாது வேறு பல உறுதியான ஆதாரங்களும் இருப்பதாக சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்.
கார்த்தி சிதம்பரத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போனின் பாஸ்வேர்டை அவர் தர மறுப்பதாகவும், எந்த கேள்வியைக் கேட்டாலும், தாம் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாகக் கூறுவதாகவும் சிபிஐ வாதிட்டது. கார்த்தி சிதம்பரத்தின் காவலை நீட்டிக்காவிட்டால் ஆதாரங்களை திரித்து விடுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நிறுவனத்திற்கும் கார்த்தி சிதம்பரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
கார்த்தி சிதம்பரத்தின் கைது நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என்றும் கடந்த 6 மாதங்களில் சிபிஐ ஒரு சம்மன் கூட அனுப்பவில்லை என்றும் அவர் கூறினார். கடந்த ஆகஸ்டில் 22 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ, அதன் பிறகு அவரிடம் கேட்க ஏதுமில்லை என்பதாலேயே 6 மாதங்களில் எவ்வித சம்மனும் அனுப்பவில்லை என்றும், கார்த்தி சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் எனவும் அபிஷேக் சிங்வி வலியுறுத்தினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிபிஐ நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…