கர்தார்பூர் வழித்தடம் திறக்க அனுமதி அளித்ததற்கு பிரதமர் மற்றும் அமித்ஷாவுக்கு பஞ்சாப் முன்னாள் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பகுதி தான் கர்தார்பூர் பகுதி. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தனது கடைசி காலத்தில் இந்த பகுதியில் தான் வாழ்ந்து மறைந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரது நினைவாக அப்பகுதியில் தர்பார் சாஹிப் குருத்வாரா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஓராண்டு காலமாக இந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் கர்தார்பூர் பகுதிக்கு நாளை முதல் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அவர்கள் கர்தார்பூர் வழித்தடத்தை சரியான நேரத்தில் மீண்டும் தந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 19 ஆம் தேதி குரு நானக் தேவ் ஜியின் குரு புரப் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித ஸ்தலத்தில் தரிசனம் செய்ய இது வாய்ப்பளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…