Former Karnatka CM HD Kumarasamy [Image source : AP]
காவிரியில் இருந்து உச்சநீதிமன்ற உத்தரவு படி உரிய அளவு தண்ணீர் தர வேண்டும் என தமிழக அரசு தரப்பும், காவிரியில் கர்நாடக மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் இருப்பதால், எங்களால் தண்ணீர் தர முடியாது என கர்நாடக தரப்பு கூறி வருகிறது. இந்நிலையில் தான் அண்மையில் கர்நாடக அரசு , காவிரி ஒழுங்காற்று மையத்தின் பரிந்துரை படி உரிய அளவு தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்தும், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது எனவும் இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு சுமார் 1600க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் இன்று கர்நாடகா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த முழு அடைப்புக்கு எதிர்கட்சிகளான பாஜக, மஜக கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இது குறித்து மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான H.D.குமாரசாமி தனது X சமூகவலைதள பதிவில் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
இன்றைய முழு அடைப்பு போராட்டம் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிலம், மொழி, நிலத்தடி நீர் பிரச்சினை வரும்போது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கர்நாடக குடும்பத்தில் உள்ள இந்த நல்லிணக்கமும் ஒற்றுமையும் அண்டை மாநிலங்களுக்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். கன்னட உணர்வுகளை காங்கிரஸ் அரசு நசுக்கக் கூடாது. காவேரி எங்களுடையது என H.D.குமாரசாமி பதிவிட்டுள்ளார்.
கர்நாடக முழு அடைப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…