#KarnatakaElectionResults2023 16 வாக்கு வித்தியாசத்தில் ஜெயநகரை வென்ற பாஜக.!!
கர்நாடகாவின் ஜெய்நகர் தொகுதியில் பாஜக 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு 36 மையங்களில் தொடங்கியது.
அதில், காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. மேலும், பாஜக 65 தொகுதிகளை மட்டுமே வென்று இருந்தது. இந்த நிலையில், கர்நாடகாவின் ஜெய்நகர் தொகுதியில் பாஜக 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
60 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதாக இருந்த நிலையில், ஜெய்நகர் தொகுதியில் பாஜக வாக்கு எண்ணிக்கை குறைவாக வந்ததாக சுட்டிக்காட்டி மறு வாக்கு எண்ணிக்கை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தது.
அதில், பாஜக வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயாநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராமமூர்த்தி, காங்கிரஸ் வேட்பாளராக சவுமியா ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர். நேற்று வாக்கு பதிவு எண்ணப்பட்ட நிலையில், பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி 57 ஆயிரத்து 797 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா 57 ஆயிரத்து 781 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.