இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடம்!
இந்தியாவை பொறுத்தவரையில், குற்றம் செய்யும் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி பலரின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தாலும், இதனை பயன்படுத்தி சிலர் மோசமான குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலமாக கர்நாடகா இருந்து வருகிறது. இந்தியாவில் 2019-ம் ஆண்டில் 44,456 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது. இதில் கர்நாடகாவில் மட்டும் 12,020 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது.
அடுத்தபடியாக உத்திரபிரதேசத்தில் 11,416 வழக்குகளும், மஹாராஷ்டிராவில் 3,604 வழக்குகளும் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் கர்நாடகாவில் 93.1% குற்றங்கள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன.