காங்கிரசின் நடவடிக்கைகள் சிரமமாக இருந்தால் பாஜக பாகிஸ்தானுக்கு செல்லட்டும் என கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து சித்தராமையா முதல்வராக இருக்கிறார். அவரது தலைமையின் கீழ் முதற்கட்டமாக பதவியேற்ற அமைச்சர் குழுவில் முக்கியமானவர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே.
இவர் அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கையில் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க நினைத்தால் சும்மா இருக்க மாட்டோம். அப்படி பஜ்ரங் தளம், ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அமைப்புகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் எனவும்,
சட்ட ஒழுங்கு மீறப்பட்டால் அந்த அமைப்புகள் தடை செய்யப்படும் எனவும் பிரியங்க் கார்கே குறிப்பிட்ட்டார். ஒருவேளை இந்த தடை நடவடிக்கைகள் பாஜகவுக்கு சிரமமாக இருந்தால் அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும் என கடுமையாக விமர்சித்து இருந்தார் கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…