இறுதிகட்டத்தை நோக்கி கர்நாடக தேர்தல்… இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.!

PM Modi and Rahul Gandhi

இன்று மாலையுடன் கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. 

நாளை மறுநாள் இந்திய அரசியல் களமே உற்றுநோக்கும் மிக முக்கிய தேர்தலாக கர்நாடக சட்டமன்ற தேர்தல் அமைய உள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் மே 10 (வரும் புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

அடுத்த வருடம் 2024இல் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் இந்த தேர்தலை பாஜக – காங்கிரஸ் ‘நாடாளுமன்ற தேர்தல் ஒத்திகை’ போல எண்ணதொடங்கிவிட்டனர் . இதனால் அங்கு பிரச்சாரமானது வழக்கத்தை விட அதிக பரபரப்பாக செய்யப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடகாவில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றன. ஆளும் பாஜக அரசு ஆட்சியை தக்க வைக்க, பாஜகவின் முக்கிய நிர்வாகிகளான பிரதமர் மோடி, உள்துரை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் , பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா என பிரதான அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர்.

அதே போல , கர்நாடகாவில் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல்காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில பொறுப்பில் இருக்கும் சித்தராமையா, டி.கே.சிவகுமார் என பலரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஃதறிக்கிடையில், மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் குமாரசாமியும் இந்த தேர்தலில் மிக முக்கிய வகிப்பார் என கூறப்படுகிறது. அதற்கேற்றாற் போல அவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்.

இந்த சூறாவளி பிரச்சாரம் இன்று மலையுடன் நிறைவடைகிறது. நாளை மறுநாள் ஓரக்கட்டமாக வாக்கு பதிவு அதற்கடுத்து சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற முடிவு அறிவிக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்