கர்நாடக எம்எல்ஏக்கள் 10பேரும், சபாநாயகர் முன்பு மாலை 6 மணிக்குள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக அரசியலில் பெரும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆளும் காங்கிரஸ் (11) மற்றும் மஜத (3) எம்.எல்.ஏ.க்கள் செய்வதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் அளித்தார்கள்.ஆனால் கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக ஆளுநருக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் கடிதம் அனுப்பினார்.அதில்,5 பேரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கடிதம் அனுப்பினார்.
அதே சமயம் 9 பேரின் ராஜினாமா கடிதத்தை நிராகரித்தார்.அவர்கள் அனைவரும் நேரில் வந்து மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.இவர்களில் 7 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்,3 பேர் ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 பேர் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆவார்.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் .அந்த மனுவில் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக மனுவில் குற்றம்சாட்டினார்கள்.இவர்களது மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மனுவை இன்று விசாரிப்பதற்காக தெரிவித்தது.
இதனையடுத்து இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் இன்று மாலை 6 மணிக்கு சபாநாயகர் முன்னிலையில ஆஜராகி தங்கள் ராஜினாமா கடிதத்தை அளிக்கலாம்.மேலும் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தின் மீது சபாநாயகர் இன்றே முடிவு எடுக்க வேண்டும் என்றும் பெங்களூரு வரும் எம்.எல்.ஏக்களின் பாதுகாப்பை மாநில டிஜிபி உறுதி செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.பின்னர் சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…