சட்டமன்ற விவாதங்கள் நிறைவு பெற்றால் இன்றே கூட நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தாயார்! கர்நாடக சபாநாயகர் பதில்!
கர்நாடக சட்டமன்ற விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடக்கும் என இந்திய அரசியல் களமே எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சனிக்கிழமை அதிருப்தி சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி, அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் தெரிவித்தது.
இந்த வழக்கு தொடர்பாக பதில் கூறிய நீதிபதி, ‘ சட்டமன்றத்தில் அனைவருக்கும் விவாதிக்க நேரம் கொடுக்கப்பட்டு விவாதம் நடைபெறுவதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தாமதமாகிறது. இன்று மாலை விவாதங்கள் முடிந்தால் கூட உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திவிடுவோம். அப்படி இல்லை என்றால், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்.’ என கூறினார்.