#Karnataka report: இரண்டாவது நாளாக 10,517 பேருக்கு கொரோனா.!
கர்நாடக மாநிலத்தில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு.
அந்த வகையில், இன்று ஒரே நாளில் 10,517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 7,00,786 ஆக உயர்ந்துள்ளது.மேலும், கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 8,337 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், இதுவரை 5,69,947 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 102 பேர் உயிரிழந்ததால் இதுவரை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,789ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.தற்போது, மருத்துவமனையில் 1,20,929 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வாருகின்றனர்.