“ராஜ தந்திர குமாரசாமி” பல்டி அடித்த 22 எம்எல்ஏக்கள்..! அதிர்ச்சியில் எடியூரப்பா..!!

Default Image

கர்நாடக அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 22 பேரும், முதல்வர் குமாரசாமி யின் எச்சரிக்கையால் பின்                    வாங்கியுள்ளதாக   தகவல் வெளியாகியுள்ளது.

Related image

கர்நாடக மாநில‌த்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் பதவி கேட்டும், காங் கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்டும் சதீஷ் ஜார்கிஹோளி தலைமையில் மகாராஷ்டிர எல்லையோர காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.

Related image

இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 22 பேரும் மகாராஷ்டிராவில் முகாமிட்டு, கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்திக்கவும் முடிவெடுத்தனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் குமாரசாமி அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குறித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தியிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து அதிருப்தியில் இருக்கும் ரமேஷ் ஜார்கிஹோளி, சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோரை டெல்லிக்கு வரவழைத்து ராகுல் காந்தி பேசினார்.இதனிடையே அதிருப்தி எம்எல்ஏக்களை குமாரசாமி தொடர்புகொண்டு, பாஜகவுடன் குதிரை பேரம் பேசிய வீடியோ சிக்கியிருப்பதால் அதனை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் சிக்க வைக்கப் போவதாக எச்சரித்தார்.

Image result for karnataka bjp yeddyurappa

இதே போல கர்நாடக துணை முதல் வரும், மூத்த காங்கிரஸ் தலைவ ருமான‌ பரமேஷ்வர் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்போவ தாக எச்சரித்ததாக தெரிகிறது. இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்கள் 22 பேரும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடிவெடுத் திருப்பதாக தெரிகிறது.

Related image

இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக போராடுமாறு குமாரசாமி மக்களை பகிரங்கமாக கேட்டுக்கொண்டதால் மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவும் அதிர்ச்சி அடைந்தார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடாது என்பதால், ஆளுநரை சந்திக்கும் திட்டத்தை அவர் ஒத்திவைக்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.கர்நாடக அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 22 பேரும், முதல்வர் குமாரசாமி யின் எச்சரிக்கையால் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்