காணவில்லை.! கர்நாடக எம்.எல்.ஏவின் தம்பி மகன் மாயம்.! போன் ஸ்விட்ச் ஆஃப்.. கடத்தல் சம்பவமா.?
கர்நாடக எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யாவின் சகோதரர் ரமேஷின் மகன் சந்திரசேகர் காணாமல் போயுள்ளார்.
கர்நாடக மாநிலம், ஹொன்னாலி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யாவின் சகோதரர் ரமேஷின் மகன் சந்திரசேகர் திடீர்ரென காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
காணாமல் போன சந்திரசேகர், ரேணுகாச்சார்யாவின் அரசியல் வட்டாரத்தில் மிகவும் நெருக்கமானவர். தேர்தலின் போது கட்சி தொண்டர்களுடன் தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுப்பட்டவராம்.
மேலும் சந்திரசேகர் ஆன்மீக ஈடுபாடு கொண்டவராம். அவர் ஈஷா அறக்கட்டளை மற்றும் வினய் குருஜியின் தீவிரப் பின்பற்றுபவர் என எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா கூறியுள்ளார்.
சந்திரசேகர் தனது காரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.56 மணியளவில் சிவமொக்கா வழியாகச் சென்றது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தெரிகிறது எனவும், மேலும், ஷிவமொகாவில் சந்திரசேகரின் தொலைபேசி காலை 6.48 மணிக்கு சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. சந்திரசேகர் பயணித்த காரும் காணாமல் போயுள்ளது. என தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா பேசிய, சந்திரசேகரை கண்டுபிடிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிவமொக்கா, தாவங்கரே மற்றும் சித்ரதுர்கா காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளார். சந்திரசேகர் காணாமல் போன சம்பவம் கடத்தல் சம்பவமா.? வேறு ஏதேனும் பிரச்சனையா என பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.