கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லைப் பிரச்சனை..! உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்..!

Default Image

கர்நாடகா – மகாராஷ்டிரா இடையேயான எல்லைப் பிரச்சனையை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா விலகினார்.

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையேயான எல்லைப் பிரச்சனையை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா விலகியுள்ளார். 2004 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956-இன் பிரிவுகள் 3,7 மற்றும் 8 இன் சில பகுதிகளை வெளியிடக் கோரி மகாராஷ்டிர மாநிலம் வழக்குத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ஹிருஷிகேஷ் ராய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

BV Nagarathna
[File Image]
மகாராஷ்டிரா அரசு :

இந்த சட்டம் மொழிவாரியாக மாநிலங்களை மறுசீரமைப்பது தொடர்பானது. ஐந்து கர்நாடக மாவட்டங்களில் இருந்து 865 கிராமங்கள் மற்றும் இடங்கள் மராத்தி பேசும் மக்களைக் கொண்டிருக்கின்றன. அவை கர்நாடகா மாநிலத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது. மகாராஷ்டிராவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசாங்கம் கூறியது. மேலும் மகாராஷ்டிரா அரசு, இரு மாநிலங்களின் அரசாங்கங்களுக்கு இடையிலான சர்ச்சையை பரிசீலிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று கூறியது.

கர்நாடக அரசு :

இந்த வழக்கை எதிர்த்த கர்நாடக அரசு, அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் மாநில எல்லைகளை முடிவு செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்கிறது என்றும் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் கூறியது. மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் அடிப்படையானது வெறும் மொழிவாரியானது அல்ல, குடிமக்கள் பேசும் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை என்று கர்நாடக அரசாங்கம் மேலும் கூறியது.

Government of Karnataka
[Image Source : Government of Karnataka]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்