நாளை கர்நாடக மாநில சட்டப்பேரவை கூட்டம்….!!
பரப்பரப்பான சூழலில் கர்நாடக மாநில சட்டப்பேரவை கூட்டம் நாளை நடைபெறுகின்றது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி இணைந்து 8 மாதங்களாக ஆட்சி நடத்தி வருகின்றன. இரண்டு கட்சி எம்எல்ஏக்களுக்கு கருத்து வேறுபாடுகள்இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்வதாக கூறப்படுகின்றது . காங்கிரஸ் , மதச்சார்பற்ற என இரண்டு கட்சியை சார்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களையும் இழுக்க தங்கள் பக்கம் இழுக்க பாஜக மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பரபரப்பான சுழலில் கர்நாடக மாநில சட்டமன்ற கூட்டம் நாளை கூடுகிறது. மேலும் நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை வருகின்ற வெள்ளியன்று கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி தாக்கல் செய்கிறார். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சில எம்.எல்.ஏக்கள் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் வந்து காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கர்நாடகாவில் அமையும் என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகின்றது.