#Breaking:சற்று முன்…சசிகலா,இளவரசிக்கு முன்ஜாமீன்!

Default Image

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா,கடந்த ஆண்டு விடுதலை பெற்று வெளியே வந்தார்.இதனிடையே சிறையில் இருந்தபோது தனக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்காக பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்,சசிகலா லஞ்சம் கொடுத்தது தொடர்பாக பெங்களூரு ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து,இந்த வழக்கில் டாக்டர் அனிதா,அக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமார்,அதிகாரிகள் கஜராஜ் மாகனூர்,சுரேஷ் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்கியது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய நிலையில்,கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதி பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.அதன்பின்னர்,சசிகலா,இளவரசி,ஆஜராக,கஜராஜ் மாகனூர்,சுரேஷ் வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.

இதனைத் தொடர்ந்து,சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர லஞ்சம் தந்த புகாரில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா,இளவரசி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.இந்த நிலையில்,சசிகலா,இளவரசி ஆகிய இருவருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.மேலும்,கஜராஜ் மாகனூர்,சுரேஷ் ஆகியோருக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்