உத்திரபிரதேச காவல்துறையினரிடம் கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

Published by
Edison

டுவிட்டர் இந்தியா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த உத்திரபிரதேச காவல்துறையினரிடம் கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் கடந்த 5-ம் தேதி இஸ்லாமிய மதத்தை சார்ந்த ஒரு முதியவரை 5-க்கும் மேற்பட்டோர் தாக்கினர். இந்த வீடியோ டுவிட்டரில் வைரலானது. அந்த முதியவரை தாக்கிய நபர்கள் அவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என கூறச்சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர் கூற மறுத்ததால் அந்த முதியவரின்  தாடியை மழித்ததாக தகவல் வெளியானது.

இதனையடுத்து,போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முதியவர் மதரீதியாக தாக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால், அந்த வீடியோ மத ரீதியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளதாகவும், போலியான கருத்துக்கள் பரப்பப்படுவதாக வீடீயோவை உடனே நீக்க வேண்டும் என மத்திய, மாநில அரசு டுவிட்டரிடம் தெரிவித்தது.

 ஆனால்,அந்த வீடியோவை டுவிட்டர் நீக்கவில்லை. இதனால், டுவிட்டர் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குத்தொடர்பாக  நேரில் ஆஜராக “டுவிட்டர் இந்தியா” நிறுவன இயக்குனர் மனீஷ் மகேஷ்வரிக்கு உத்திரபிரதேச போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

உத்தரப்பிரதேச காவல்துறை அனுப்பிய நோட்டிஸ்க்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனீஷ் மகேஷ்வரி வழக்கு தொடர்ந்தார்.அதில் முதலில் தன்னை  சாட்சியாக குறிப்பிட்ட காவல்துறை பின்னர் குற்றவாளியான மாற்றியதாக அவர் தெரிவித்தார். மேலும் காணொளி மூலமாக விசாரணைக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மனீஷ் மகேஷ்வரியை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் காணொளி மூலம் விசாரணை நடத்த உத்தரப்பிரதேச காவல்துறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில்,கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.நரேந்தர் அவர்களின் அமர்வு,”டுவிட்டர் இந்தியா மீதான குற்றச்சாட்டு என்ன? இது கருத்துக்களை அகற்றும் திறன் கொண்டதா? புகார்தாரர் டுவிட்டர் இந்தியாவை இதனுடன் எவ்வாறு இணைக்கிறார்?  என்பதை அறிய முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டதா?”,என்று போலீசாரிடம் கேட்டார்.

பின்னர்,டுவிட்டரில் பதிவேற்றப்பட்ட கருத்துகளுக்கு டுவிட்டர் நிறுவனம்தான் பொறுப்பேற்கவேண்டும்,மாறாக  டுவிட்டர் இந்தியா அல்ல.ஏனெனில்,இந்த தளத்தை இயக்குவது டுவிட்டர்தான்.

சர்சைக்குள்ளன கருத்துக்களை பதிவேற்றியவர் அல்லது அதை நீக்காதவர் மகேஸ்வரி தான் என்பதை நீங்கள் காட்ட முடியாவிட்டால்,அவர் குற்றமற்றவராவார்”,என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த உத்திரபிரதேச காவல்துறை ஆலோசகர் வழக்கறிஞர் பிரசன்ன குமார் , “விசாரணை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது,எனவே டுவிட்டர் இந்தியாவின்  பொறுப்புகள் பற்றிய தகவல்கள் தன்னிடம் இல்லை.” என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி கூறுகையில்,”நிறுவனத்தின் நோக்கங்களையும் செயல்பாடுகளையும் உங்களால் அணுக முடியவில்லையா? இது பொது தளத்தில் கிடைக்கும் தகவல். விசாரணையின் மூலம் மட்டுமே தகவல்களைப் பிரித்தெடுக்க முடியும் என்று சொன்னால், என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இதை விசாரிக்காமல் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?.

இதனால்,போலி வீடியோவை பதிவிட்ட புகாரில் டுவிட்டர் நிறுவனம் மீது எப்படி குற்றம் சுமத்த முடியும்?,”என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

Published by
Edison

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

7 hours ago
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

8 hours ago
மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

8 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

9 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

9 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

9 hours ago