கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் ஒரு இளம் காதல் ஜோடி தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை வீட்டு வெளியேறினர். அந்த இளம் பெண்ணிற்கு டிசம்பர் 5ஆம் தேதி வேறு ஒரு ஆணுடன் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. ஆதற்கு முன்னதாக டிசம்பர் 4ஆம் தேதியே அந்த ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர்.
இதனை தொடர்ந்து, ஒரு கும்பல், அந்த இளைஞனின் வீட்டிற்கு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சென்று அந்த இளைஞனின் தாயாரை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து ஆடையை அவிழ்ந்து அரை நிர்வாணமாக கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் வீடியோ வாயிலாக வெளியில் தெரிந்துள்ளது.
பாலியல் வழக்கு – உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ-வுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் அடையாளம் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே மற்றும் நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னர் விசாரணை நடைபெற்ற போது, இந்த சம்பவம் தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இன்றைய உலகில், துரியோதனன்கள் வந்து பெண்ணின் ஆடையை இழுத்தால் எந்த கிருஷ்ண பகவானும் வந்து உதவ மாட்டார்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு தெரிவித்தது. எங்களிடம் பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. அந்தப் பெண்மணி இரண்டு மணிநேரம், ஆடைகள் அகற்றப்பட்டு, கம்பத்தில் கட்டப்பட்டு ஒரு மிருகத்தை போல தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை தருகிறது. அவர்களை மனிதர்கள் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது. விலங்குகள் கூட தங்கள் இனத்தில் இவ்வாறு நடந்து கொள்ளாது என்று தலைமை நீதிபதி கூறினார்.
மேலும், சுதந்திரத்திற்குப் பிறகு இப்படி ஒரு சம்பவம் என்பது இந்திய அரசியலமைப்புக்கு துரதிர்ஷ்டவசமான ஒன்று. சட்டத்திற்கு பயப்பட வேண்டியதில்லை என்ற நினைப்பு வருவது ஒரு வருந்தத்தக்க நிகழ்வு. இந்த சம்பவம் குறித்த முழு அறிக்கையை கர்நாடக போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…
கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer)…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு…