ராஜினாமா கடிதம் அளித்த 13 எம்.எல்.ஏக்களில் 8 பேரின் கடிதம் சட்டப்படி சரியானதாக இல்லை-சபாநாயகர் ரமேஷ் குமார்
கர்நாடக அரசியலில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .இதனால் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மீதமுள்ள எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள்.
இந்த நிலையில் கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக ஆளுநருக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், ராஜினாமா கடிதம் அளித்த 13 எம்.எல்.ஏக்களில் 8 பேரின் கடிதம் சட்டப்படி சரியானதாக இல்லை என்றும் எம்எல்ஏக்கள் என்னை வந்து சந்திக்க நேரம் அளித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.