இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!முதலமைச்சர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா மீண்டும் கடிதம்
கர்நாடக சட்டசபை அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கிவருகிறது. நேற்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதனால் பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர்.
இதனால் ஆளுநர், சபாநாயகரிடம் இன்று மதியம் 1.30க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். ஆனால் மணி 2 ஐ தாண்டியும் இன்னும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.