தொடரும் நீட் எதிர்ப்பு… தமிழ்நாட்டை ஃபாலோ செய்யும் மாநில அரசுகள்.!

NEET Exam - Tamilnadu CM MK Stalin

நீட் தேர்வு : தமிழ்நாடு, மேற்கு வங்கத்தை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்து அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அரசு.

நடப்பாண்டில் நீட் நுழைவுத்தேர்வில் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சில தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெற்ற விவகாரம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்வின் மீதான எதிர்ப்பலைகளை உருவாகியுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வாருகிறது. இதற்கான பல முறை சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்து மத்திய அரசுக்கு கோரிக்கை வருகிறது. மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பழைய முறைப்படி சேர்க்கைக்கு அனுமதிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழக அரசை தெடர்ந்து அண்மையில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க மாநில அரசும் நீட் தேர்வுக்கு எதிராக மசோதாவை தாக்கல் செய்தது. நீட் தேர்வுக்கு முன் மேற்கு வங்க மாநில அரசே பொது நுழைவு தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மசோதாவில் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

அதே போல, கடந்த திங்கள் அன்று கர்நாடக மாநிலத்திலும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்தார். அதில், நீட் நுழைவு தேர்வை ரத்து செய்து மாநில அரசே நுழைவு தேர்வை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும்,

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் மிக தீவிரமானவை. அதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்து, மாநிலங்கள் தாங்களாகவே நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மாநிலங்கள் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மசோதவில் குறிப்பிடப்பட்டது.

இந்த மசோதாவுக்கு கர்நாடக சட்டப்பேரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்வை நடத்த முடியாத தேசிய தேர்வு முகமைக்கு(NTA) கண்டனத்தையும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்